20 அடி உயரம் கூடுகிறது ஈபிள் டவர்

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர், 20 அடி உயரம் கூடுகிறது.

பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது, முழுதும் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ள ஈபிள் டவர். கடந்த, 1889ல் நிறுவப்பட்டபோது,அதன் உயரம், 1,024 அடியாக இருந்தது.

அதன்பின் அதன் உச்சியில், அலைவரிசைகளுக்குப் பயன்படுத்தும், ‘ஆன்டெனா’க்கள் பொருத்தப்பட்டன. தற்போது, 1,043 அடி உயரமாக உள்ள ஈபிள் டவர் மீது புதிதாக, 20 அடி உயர தொலைத் தொடர்பு ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் உயரம், 1,063 அடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE