
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சுமார் ஓராண்டு வரை பிற்போடுமாறு இலங்கை மத்திய வங்கி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்கும். எனினும், மத்திய வங்கியின் யோசனையை அரசு ஏற்குமா என்பது பற்றி இன்னும் தெரியவரவில்லை.
நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு, தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.