தற்போதைய நெருக்கடியில் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் நடுப்பகுதியில் தற்போதைய மின்வெட்டு 10 மணிநேரமாக உயரும் என்றும் விரைவில் மின்சார விநியோக நேரம் வெளியிடப்படலாம் என்றும் CEB பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் டீசல் ,பெற்ரோல் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. தற்சமயம் பெட்ரோல் ஏழு நாட்களுக்கும், டீசல் நான்கு நாட்களுக்கும் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், எரிபொருள் கப்பல் இன்று கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் நிற்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புகளில் எரிபொருளை விநியோகிக்குமாறு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஒரு நபருக்கு 3000 ரூபாய்க்கு மேல் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க மழை மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் ஒன்றே ஒரே வழி என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.