
போர் குற்ற ஆதாரம் திரட்டும் பொறிமுறைக்கு தன்னார்வ நிதியை பயன்படுத்த இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அது இலங்கை மக்களுக்கு உதவாது எனவும், நாட்டின் ஒற்றுமை, பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் என்பவற்றை பாதிக்கும் எனவும் மாநாட்டில் வைத்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.