
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமைக்கு எதிராக கடுவளை நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அமைச்சர் பசில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.