தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிலையில் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் குறித்த அலுவலகம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினரொருவரால் மாணவருக்கு வழங்குவதற்காக துவிச்சக்கரவண்டியொன்று மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டது