கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேகமாக பரவியது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பரவியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜோன்சன், கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு பரிசோதனையை நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக அறிவித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், எதிர்கால கொரோனா மாறுபாடுகளை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மற்றவர்களிடம் கரிசனையுடன் இருக்குமாறு மக்களை கட்டாயப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வை கொண்டிருந்து, அன்புக்குரியவர்களை கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து காக்க வேண்டும் என்றும் போரிஸ் ஜோன்சன் கூறினார்.