
தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறுகிறது.
இந்த சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறுகிறது.
இவ்வருடம் நடைபெறும் முதலாவது கலந்துரையாடல் இது என்பதுடன், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.