கொழும்பு − கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியிலுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களை அண்மித்துள்ள வனப் பகுதியிலேயே இந்த தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு பிரிவினர் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.