
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஜெ. கஜநிதிபாலனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.