வெளிநாடுகளுக்கிடையில் இலங்கை வர்த்தக நாமத்துடன் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் வடிவமைப்புக்களை ஊக்குவித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் கைவினைப் பொருட்களை வழங்கும் நிகழ்வு பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இலங்கையிலுள்ள 63 வெளிநாட்டு தூதுவர்கள் மெய்நிகர் ஊடாக கலந்து கொண்டதோடு , இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு நினைவு பொதியொன்றையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே , இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.