இரு நாட்டு மீனவர்களையும் மோதவிட்டு அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இழுவைமடித் தொழிலில் இருந்து விலகி, மாற்றுமுறை தொழிலுக்கு சென்றால், இருதரப்பு மீனவர்களும், இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் சவாலாக வாழ முடியும். குடும்பத் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள பெண்கள், இந்தப் பிரச்சினையால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.