அனுமதியின்றி மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார சட்டம் மற்றும் பொது பயன்பாட்டுச் சட்டத்தின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார்.
மின்சார விநியோகம் தடை அமுல்படுத்தப்படுமாக இருந்தால், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 02 நாட்களுக்கு முன்னர் தமது ஆணைக்குழுவிடம் அனுமதி பெறப்படாமல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.