நிபந்தனைகளுடன் கடன் வழங்கும் இந்தியா!

இந்தியா, இலங்கைக்கு வழங்க உள்ள பெருந்தொகை கடன் பற்றியும் அதன் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனைகள் தொடர்பிலும் இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய “இலங்கை பணம் இல்லாத நாடு” என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலைமையிலிருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனுதவியாக இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனையாக இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும்.

அதேவேளை, இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாகவும் அவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE