விலை குறிப்பிடப்படாத சீமெந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் ஒரு மூடை சீமெந்து 2,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விலை குறிப்பிடப்படாத சீமெந்து மூடைகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் வர்த்தகர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப சீமெந்தினை விற்பனை செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எவ்வாறாயினும் சில வர்த்தகர்கள் சீமெந்தினை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தெரியவந்துள்ளது.