அமைச்சரவை மனு மீதான விசாரணை விரைவில்

நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த மனு மீதான விசா​ரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினத்தில் மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE