ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழுக் கூட்டம் இன்று(22) இடம்பெறவுள்ளது.
கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மத்தியகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியினால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, இந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன், மாவட்ட பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தை நடத்துதல் உள்ளிட்ட சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது