மன்னார் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தலைமன்னார் கடற்பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 485 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.