மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது.

எனவே எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE