
சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தமது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் சுங்க திணைக்கள பணிப்பாளர் ஜீ. வீ. ரவிபிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 262 வாகனங்கள் தேவையான அபராதம் மற்றும் வரிகளை வசூலித்த பின்னர் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.