எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதி இரகசிய விசாரணை

இந்த புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கோவிட் தொற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“எரிவாயு தொடர்பில் சிக்கல் உள்ளது. எரிவாயு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த காஸ் வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் கொழும்பு 07 பகுதியில் எரிவாயு வெடிப்பதில்லை. வட மாகாணத்தில் எரிவாயு வெடிப்பதில்லை. கண்டி, குருநாககல் பகுதிகளில் எரிவாயு வெடிக்கவில்லை.

எனவே, இந்த எரிவாயு வெடிப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதி இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு வெடிப்புகள் குறித்து நாட்டு மக்கள் இப்போது ஆர்வமாக உள்ளனர். மக்கள் இப்போது எரிவாயு பயன்படுத்த பயப்படுகிறார்கள். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறேன்’ என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொவிட் தொற்றினால் பாடசாலை மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை இழந்தனர். அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த கோவிட் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.

சமீபத்தில், ஆசிரியர்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்தை வற்புறுத்தினர். தற்போது ஆசிரியர்களின் பிரச்கினைக்கு தீர்வு கண்டுள்ளோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முயன்ற போது பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவர்களை போராட்டத்திற்கு தூண்டினர். மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் சிலர் தெருவில் வீதியில் இறங்கினர். ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறியவர்கள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கூட அங்கீகரிக்கவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE