ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1950 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தொகை தரவுகளை பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து சீனா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, அதன் மக்கள் தொகை 1.42 பில்லியனாக இருந்தது. அப்போது, இந்தியாவின் மக்கள் தொகை 1.41 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் மக்கள் தொகை 1.42 பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அறிக்கை கூறுகிறது.
தரவு பகுப்பாய்வின்படி, இந்த பத்தாண்டுகளின் முடிவில் இந்தியாவின் மக்கள் தொகை 1.5 பில்லியனைத் தாண்டும், மேலும் இது 2064 வரை தொடர்ந்து உயரும்.
மேலும் 2068ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 2 பில்லியனைத் தாண்டும் என்று தரவு அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன