பதிவுசெய்யப்படாத இரண்டு இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம், உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக அமைச்சரவை அமைச்சர்கள், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.