5 மாடி கட்டிடம் இடிந்து 11 பேர் பரிதாப சாவு

சிரியாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள ஒரு 5 அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இடிபாடுகளை அகற்றியபோது, 3 குழந்தைகள், 7 பெண்கள், ஒரு முதியவர் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்க கூடும் என தெரிகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.விசாரணையில், சட்ட விரோதமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகவும், அடித்தளம் மோசமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதனால் ஏற்கனவே சிலர் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறியதாவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE