நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும்! -ஹர்ஷன

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நெருக்கடிக்குள் தள்ளியவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.