சாமியார் நித்யானந்தா இலங்கையில் தஞ்சம் கேட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம்..!!

இந்தியாவில் பாலியல் குற்ற வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா இலங்கையில் தஞ்சம் கேட்டு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து நித்யானந்தா கடந்த 2018ல் திடீரென தலைமறைவானார்.

தனி தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என பெயரிட்டு ஆட்சி செய்து வருவதாக அவ்வப்போது வீடியோக்களில் கூறிவரும் நித்யானந்தாவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெயரில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நித்யானந்தா உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ சிகிச்சைக்கான செலவை கைலாசா அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு தஞ்சம் அளித்தால் இலங்கைக்கு தேவையான முதலீட்டையும் அவர் வழங்குவார் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.