ஓய்வை அறிவித்தார் செரீனா; ரசிகர்கள் பலர் கண்ணீர்

அமெரிக்காவின் ஆர்தர் அசே ஸ்டேடியத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்தோல்வியை தழுவினார். இதனால் அவர் கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.

டென்னிஸ் உலகில் லெஜண்டான செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தார். தொடர்ந்து ஜொலித்த செரீனாவுக்கு இன்று நியூஸிலாந்தில் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பெரும் சறுக்கலை தந்தது.
3 வது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஜ்லா டோம்லி ஜனோவிக்கியிடம் 7-5 , 6-7 , 6-1 என்ற செட் கணக்கில் செரீனா தோல்வியை தழுவினார்.

ஆட்ட முடிவில் கண்ணீர் விட்டபடி டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இது பலரது ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. செரீனா தனது கையில் அன்பு சின்னத்தை காட்டி கண்ணீர் விட்டபடி புறப்பட்டார்.

பல ரசிகர்கள் சமூகவலை தளங்களில் செரீனாவை பாராட்டி பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ” இது போல் ஒரு வீராங்கனையை உலகில் பார்க்க முடியாது. செரீனாவை வார்த்தைகளால் புகழ முடியாது, தேங்க்யூ செரீனா, “

Leave a Reply

Your email address will not be published.