ரிஷி சுனக், லிஸ் ட்ரஸா ஆகிய இருவரில் யார் அடுத்த பிரிட்டன் பிரதமர் என்பதை தீர்மானிக்கும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வாக்களித்து வருகின்றனர். பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவிக்க இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக்கும், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸா போட்டியிடுகின்றனர். இருவரில் யார் பிரிட்டன் பிரதமர் என்பதை தீர்மானிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் தங்களது விருப்ப வேட்பாளருக்கு வாக்களித்து வருகின்றனர். 1 லட்சத்து 60 ஆயிரம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மற்றும் இணையவழியில் வாக்களிக்கின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு முடியும் பிரிட்டன் பிரதமர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு 5ம் தேதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் பிறப்பால் ஆங்கிலேயர் அல்லாத முதல் பிரிட்டன் பிரதமர் என்ற சிறப்பை பெறுவார். ரிஷி சுனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.