இன்று உலக தேங்காய் தினம்

தாயைப் போல தாராள குணம் கொண்டது தென்னை. அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. இந்தத் தென்னை குறித்த விழிப்புணர்வுக்காக செப்.2 ல் ‘உலக தேங்காய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிகம் சாகுபடியாகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. அறுபது ஆண்டுகள் வாழும்.

தேங்காய் விளைச்சலில் உலகில் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திராவில் உள்ளது. தென்னை மரத்தின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. இது உணவு, எண்ணெய், மருத்துவம், அழகு சாதனப் பொருள் என பலவிதங்களில் பயனளிக்கிறது.

தாயைப் போல தாராள குணம் கொண்டது தென்னை. அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. இந்தத் தென்னை குறித்த விழிப்புணர்வுக்காக செப்.2 ல் ‘உலக தேங்காய் தினம்’ கொண்டாடப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published.