மதுவால் புற்றுநோய் 40 லட்சம் பேர் பலி

புகையிலை பழக்கம், மது குடிப்பது, உடல் பருமன் போன்றவற்றால் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகிறது என்றும், கடந்த 2019ம் ஆண்டில் உலகில் 40 லட்சம் பேர் இந்நோய்க்கு பலியாகினர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், உலகில் ஏற்படும் சுகாதார பிரச்னைகளில் புற்றுநோய் மிக பெரிய சவாலாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு புற்றுநோய்க்கு 40 லட்சத்து 45 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். புகைப்பிடித்தல், மது அருந்துவது, உடல் பருமன் ஆகியவையே புற்றுநோய் தாக்குவதற்கு முக்கிய காரணங்களாகும் .உலகில் உள்ள 5 பிராந்தியங்களில்தான் புற்றுநோய் இறப்பு அதிகமாக உள்ளது.

மத்திய ஐரோப்பாவில் ஒரு லட்சம் பேருக்கு 82 இறப்புகள், கிழக்கு ஆசியாவில் லட்சத்துக்கு 69.8, வட அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கு 66.0, தென் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கு 64.2, மேற்கு ஐரோப்பாவில் ஒரு லட்சத்துக்கு 63.8 இறப்புகளும் ஏற்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறை இயக்குனர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகையில், ‘‘ஆண்கள், பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு புகைப்பிடிப்பதுதான் முக்கிய காரணம்.

அதை தொடர்ந்து மது அருந்துவது, உடன் பருமன் ஆகியவையும் காரணம் என தெரிய வந்துள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE