தேசிய டெங்கு ஒழிப்பு வாரம், இம்மாதம் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின்பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50,000 பேர் டெங்கு தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது.
இதனைகருத்திற் கொண்டே தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, தேசியடெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறினார்.