ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஃபைசாபாத் எனும் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 4.9 ரிச்டரில் ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலநடுக்கமானது 93 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஜூன் இறுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்றில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருந்ததுடன் 1,500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE