பாகிஸ்தானில் தொடர்ந்து கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக பலுசிஸ்தான், கைபர் கப்துவா மாகாணங்களில் கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் 5 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக மாறியது.
ஏராளமான வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியும் வெள்ளத்தில் மிதக்கிறது. கொட்டி தீர்த்த கனமழையால் சாலையெங்கும் வெள்ள நீர் ஆக்கிரமித்துள்ளது.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலைசாறிவ்வுகளில் சிக்கி இதுவரை 59 பேர் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது. சராசரி அளவை விட இந்த ஆண்டு பருவமழை இதுவரை 86 விழுக்காடு அளவுக்கு பெய்துள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.