டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டிவிட்டர், உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்ட முன்னனி சமூக வலைதளமாக இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டிவிட்டரை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்குதற்கு கடந்த மார்ச்சில் ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில், டிவிட்டரில் பல லட்சம் போலி கணக்குகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதனால், போலி கணக்குகளின் விவரத்தை வழங்கும்படி டிவிட்டர் நிர்வாகத்திடம் எலான் மஸ்க் கேட்டார்.
ஆனால், அதை டிவிட்டர் நிர்வாகம் கொடுக்க மறுத்து வந்ததால், அதற்கும் மஸ்கிற்கும் மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், டிவிட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக மஸ்க் நேற்று முன்தினம் இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் காரணமாக, டிவிட்டரின் பங்கு விலை மஸ்க்கின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ள டிவிட்டர் நிர்வாகம், அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.