
இஸ்ரேலில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லெப்பிட் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, அவர் மிகக்குறுகிய காலத்திற்கே பதவி வகிக்கவுள்ளார்.
யூதர்களுக்கான ஜனநாயக ரீதியிலான, வலிமையான, செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் லெப்பிட் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக் கூறியுள்ளார். அத்துடன், புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் நட்பிற்கு இஸ்ரேலின் இடைக்கால பிரதமராக செயற்பட்ட நப்தாலி பென்னட்டுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.