நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்!!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் சிலாபத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் குழுவில் உள்ளனர்.

நேற்று காலை 8:40 மணிக்கு விமானத்தில் கொக்கோஸ் தீவில் இருந்து இலங்கையர்கள் குழு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.விமானத்தில் 100 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர்.

குறித்த நபர்கள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளால் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து 46 இலங்கையர்களும் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE