கோடையின் காரணமாக டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி கூறுகையில், வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை எனவும் இதுகுறித்து கண்காணித்து வருவதாகவும் ஆர்.கே.ஜனமணி கூறியுள்ளார்.
கடும் வெப்பத்தின் காரணமாக தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஜூன் 4 முதல் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த வெப்பம் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் எனவும் அதனால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.