யாழ்ப்பாணத்தில் மாயமான 3 வயதுச் சிறுமி

யாழில் காணாமல் போயிருந்த 3 வயதுச் சிறுமி ஆறு கிலோமீற்றர் தொலைவில் மாசேரிப் பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த கபிலன் பவிதா (3 வயது) என்ற சிறுமி காணாமல் போயிருந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தகவலறிந்து பலநூற்றுக்கணக்கான மக்களும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பல பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் இரவிரவாக ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மிருசுவிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாசேரி என்ற பகுதியில் சிறிய ஆலயம் ஒன்றிற்கு அருகியில் தரித்து நின்றிருந்த சிறுமி அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிஸார் அங்கு சென்று குழந்தையை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

சிறுமி அச்சத்தால் உறைந்து காணப்படுவதாகவும் யாருடனும் பேசாது காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி ஆறு கிலோமீற்றர் தூரம் வெறுங்காலுடன் நடந்திருப்பரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிறுமி கடந்து சென்ற பகுதியில் ஒரு பகுதி நீரேந்து பிரதேசமான களப்புப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE