
எதிர்வரும் 1ஆம் திகதி முதல் புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.