உங்கள் வயது மற்றும் நீங்கள் எங்கு பயணிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, நாங்கள் பரிந்துரைக்கும் பயண தடுப்பூசிகள் பற்றிய சில தகவல்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கிய ஆலோசனைகள் உள்ளன.
தடுப்பூசிகளின் சிறந்த விளைவைப் பெற வேண்டுமானால் நீங்கள் பயணம் செய்வதற்கு போதிய நாட்களுக்கு முன்னரே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பயண தடுப்பூசிகள் பற்றிய பொதுப்பார்வை
நீங்கள் எந்த நாட்டிற்குச் செல்கிறீர்கள், அங்கு என்ன செய்யப் போகிறீர்கள், எவ்வளவு காலம் வெளியில் இருக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து தடுப்பூசிகளின் தேவை ஏற்படும்.
உங்கள் உடல்நிலை, வயது, ஏற்கனவே நீங்கள் பெற்றுக் கொண்ட தடுப்பூசிகளின் தன்மைநிலை மற்றும் தற்போதைய தொற்றுநோயின் நிலைமை ஆகியவற்றைப் பொறுத்தே மேலதிக தடுப்பூசிகள் தரப்படும். எனவே, நீங்கள் பயணம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது தடுப்பூசி அலுவலகத்துடன் கலந்துரையாடுதல் நல்லது.
பெரும்பாலான தடுப்பூசிகளின் முழுமையான பயனை நமது உடல், ஊசியினை பெற்ற நாளிலிருந்து குறைந்தது 1-2 வாரங்களுக்கு பின்னரே பெற்றுக் கொள்கிறது. சில தடுப்பூசிகள் முழு பலனைப் பெற இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஆவணப்படுத்தல்
அனைத்து தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி பதிவேட்டில் SYSVAK இல் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் (16 வயதுக்குட்பட்டவர்கள்) எந்த தடுப்பூசிகளைப் பெற்றுள்ளீர்கள் என்று நீங்கள் கருதினால், அதை helsenorge.no தளத்தில் பார்க்கலாம்.
தடுப்பூசிகள் (helsenorge.no)
சில நாடுகள் சில நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என பணிக்கிறார்கள். இதற்கு உங்கள் மருத்துவரிடம் உதவியினைப் பெற்றுக் கொள்ளலாம்.
தடுப்பூசி சான்றிதழ்
நீங்கள் வெளிநாட்டில் தடுப்பூசி பெற்றிருந்தால், தடுப்பூசியின் வகை மற்றும் பெற்றுக்கொண்ட திகதி குறித்த விபரங்களை எழுத்து வடிவில் ஆவணமாய் பெறுவது முக்கியம். நீங்கள் நாடு திரும்பிய பிறகு தேசிய தடுப்பூசி பதிவேட்டில் பதிவு செய்யலாம்.