ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சிலவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், தீவைப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திக அனுருத்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் நிமல் லன்சா எம்.பியின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் “கோட்டா கோ கம“ மற்றும் “மைனா கோ கம“ என்பவற்றின் மீது மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.