டயர் விற்பனை நிலையமொன்றில் தீ

பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயினால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE