
நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் எனவும் இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.