பிரிட்டனில், ஊரடங்கு விதிகளை மீறி, பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்ற நிதி அமைச்சர் ரிஷி சுனக், அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவலின்போது, பொது நிகழ்வுகளில் கூட்டம் சேரக்கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இருந்தும், 2020 ஜூனில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில், சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகத்தில் நடந்த அந்த விருந்தில், நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், பிரதமர் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் இருவருக்கும் 20 ரூபாய் அபராதம் விதித்து, ‘நோட்டீஸ்’ அனுப்பினர். இதையடுத்து, போரிஸ் ஜான்சன் அபராத தொகையை நேற்று முன்தினம் செலுத்தினார்.இந்நிலையில், விருந்தில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கேட்ட நிதி அமைச்சர் ரிஷி சுனக்கும், தனக்கான அபராத தொகையை நேற்று செலுத்தினார்.