சீன – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வௌிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi), இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுக்கு பின்னர், சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர், முதன்முறையாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியா செல்வதற்கு முன்னர், சீன வௌிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்திய விஜயத்தை அடுத்து சீன வௌிவிவகார அமைச்சர் இன்று மாலை நேபாளத்திற்கு செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE