இலங்கையில் பெற்றோல் நிரப்புவதற்காக 6 மணிநேரம் வரிசையில் காத்திருந்த இருவர் கடும் வெயிலில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருட்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.
கண்டி மாவட்டத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கொழும்பில் உள்ள புக் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் வரிசையில் காத்திருந்த 70 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெப்ப சலனம் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘இலங்கைக்கு எரிபொருளை வாங்குவதற்கு இந்தியா கடன் வழங்கிய நிலையில், பெற்றோலியம், டீசல் மற்றும் விமான எரிபொருளை வாங்கினோம். மேலும் ஒரு கப்பலில் டீசல் வந்தது. அவற்றை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிக்கும் நடவடிக்கை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .