துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் குறித்து குறிப்பிடும் வார்த்தையை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறாக பயன்படுத்தியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் அதிபரின் மனைவியை, ‘பர்ஸ்ட் லேடி’ என அழைப்பர். வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், கமலா ஹரிஸ் பங்கேற்கவில்லை.இதை ஜோ பைடன் குறிப்பிடுகையில், ”பர்ஸ்ட் லேடியின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,” என கூறினார். அப்போது அங்கிருந்த சிலர், ‘அப்படி பார்த்தால், உங்களுக்கா கொரோனா’ என, கேட்டனர். இதையடுத்து தன் தவறை உணர்ந்த ஜோ பைடன், ”என்னுடைய பர்ஸ்ட் லேடி நலமாக இருக்கிறார்.
செகண்ட் லேடியின் முதல் ஜென்டில்மேனுக்குதான் கொரோனா,” என, சமாளித்தார். இதனால், நிகழ்ச்சி நடந்த அரங்கில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இதற்கு முன்பும், இதுபோல் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜோ பைடன் சிக்கியுள்ளார். ஒரு முறை கமலா ஹாரிசை, அதிபர் என கூறினார். சமீபத்தில் உக்ரைன் குறித்து குறிப்பிடும்போது, தவறாக ஈரான் என குறிப்பிட்டார்.