இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் மொத்தம் 204,345 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ரஷ்யாவிலிருந்து மொத்தம் 32,375 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2022 ஜனவரி முதல் 29,514 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 20,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மொத்தமாக 178,834 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 25,511 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் கூறியுள்ளது.