ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இன்றைய தினம் 3 ஆம் கட்ட பேச்சுவார்தை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய போர் தொடர்ந்தும் 7 ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. நேற்று முன்தினம் உக்ரைன்-ரஷ்யா இடையே சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் எந்தவித ஆக்கப்பூர்மான முடிவுகளும் எட்டப்படாமல் நிறைவு பெற்றது.
இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நேற்று தீவிரப்படுத்தியது. அத்துடன் ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரஷ்யா உத்தரவிட்டது.
இந்த சூழலில் ரஷ்யா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, போர் முடிவுக்கு வருமா என்று உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.