அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான விசேட சந்திப்பில் கருத்துரைக்கையில் நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிராம மட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்துத் தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களினால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.